PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:38 AM

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மண்டல குழு தலைவர் தனியரசு தலைமை வகித்தார்.
இதில், திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் பங்கேற்பதாக இருந்தது. அவருக்காக, மண்டல குழு தலைவர் இருக்கை அருகே தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், எம்.எல்.ஏ., பங்கேற்கவில்லை.
இதற்கு 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கவி.கணேசன் எதிர்ப்பு தெரிவிக்கவே, எம்.எல்.ஏ.,வுக்கு போட்டிருந்த இருக்கை அகற்றப்பட்டது.
சிறிது நேரத்தில் தன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த செந்தில்குமார், மண்டல அலுவலகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை அகற்றுமாறு, மாநகராட்சி உதவி கமிஷனர் பத்மநாபனிடம் கூற, ஸ்டாலின் படம் அகற்றப்பட்டது.
இதை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், 'நாளைக்கு தனியரசு வந்து மறுபடியும் ஸ்டாலின் படத்தை மாட்டுங்கன்னு சொல்வார்... அதிகாரிகள் பாவம், இவங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க...' என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
