PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கட்சி சார்பில்லாத சங்கமாக காட்டும் வகையில், விழா அழைப்பிதழில் தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் பெயரை அச்சிட்டிருந்தனர்.
ஆனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பெயரை, அவரது வார்டில் ஜெயித்து, துணை மேயர் பதவியை பிடித்த வெற்றிச்செல்வன் பெயருக்கு பின்னால் போட்டிருந்தனர்.
அதேபோல, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பெயருக்கும் முக்கியத்துவம் இல்லை. அழைப்பிதழை பார்த்து ஆவேசமான வேலுமணி, நிர்வாகிகளிடம் கோபத்தை காட்டியுள்ளார். மேலும், விழாவில் பங்கேற்காமல் அ.தி.மு.க.,வினர் புறக்கணித்தனர்.
இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், 'ஆட்சி மாறினால் எல்லாமே மாறிடும்... இதுக்கு நாம மட்டுமல்ல, கான்ட்ராக்டர்களும் விதிவிலக்கா என்ன...' என, முணுமுணுத்தனர்.

