/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'படிச்சிட்டு இருந்தா விடிஞ்சிடும்!'
/
'படிச்சிட்டு இருந்தா விடிஞ்சிடும்!'
PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பா.ஜ., மிரட்டியதாக கூறி, கோவை, காந்தி பார்க்பகுதியில், வடக்கு மாவட்ட காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.
அப்போது, கட்சி நிர்வாகிகள் பெயரை வரிசையாக குறிப்பிட்டார். மேடையின் பின்னால் இருந்து, கட்சி நிர்வாகி ஒருவர் துண்டு சீட்டை அவரிடம் நீட்ட, அதில் இருந்த பெயர்களையும் படித்த செல்வப்பெருந்தகை, 'வேறு யார் பெயராவது விடுபட்டிருக்கா?' என கேட்டு, நிர்வாகிகளை பார்த்தார்.
இதை பார்த்த மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம கட்சியில் கோஷ்டிக்கு, 10 பேர்னு வச்சிக்கிட்டா கூட, இவர் நுாற்றுக்கணக்கான பெயர்களை படிக்கணுமே...இப்படியே எல்லா மேடையிலும்படிச்சிட்டிருந்தா விடிஞ்சிடும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.