PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:10 AM

பா.ஜ.,வின் தமிழக பொதுச் செயலர் ராம சீனிவாசன், சமீபத்தில் திருச்சியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ.,வில் இருந்து அண்ணாமலை விலகியது முடிந்து போன விஷயம். அவர் விலகியதை பாதிப்பாக நினைக்கவில்லை. அண்ணாமலை விலகியதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கோ, இந்திய அளவில் தாக்கம் ஏற்படுவதற்கான அரசியல் சூழ்நிலையோ இல்லை.
'காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள், பெரிய தலைவர்களாகவும், முதல்வராகவும், பிரதமராகவும் உருவெடுத்துள்ளனர். ஆனால் பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில், பல தலைவர்கள் வெளியே சென்று விட்டு மீண்டும் எங்களுடன் இணைந்துள்ளனர்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அண்ணாமலையும் மீண்டும் பா.ஜ.,வுக்கு வந்தால் சேர்த்துக்குவோம்னு சொல்லாம சொல்றாரோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
