PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின்மகனும், பெரம்பலுார் தி.மு.க., - எம்.பி.,யுமான அருண் நேருவுக்கு, டிச., 12ல் பிறந்த நாள் வருகிறது. இதற்காக, மாவட்டம் முழுதும் நேருவின் ஆதரவாளர்கள்டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர்.
திருச்சி மாநகரின் முக்கிய ரவுண்டானாக்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அருண் நேருவுக்குவாழ்த்து தெரிவித்து, 20, 30 அடி உயரம் வரை கூட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
'ஈசன் பெற்ற ஆசை மகனே, தாயுமானவரின் தங்க மகனே, நாடாளும் மன்றமே, மன்னவரே, சின்னவரே'என்றெல்லாம் அடைமொழி கொடுத்து, மாநகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை தி.மு.க.,வினரே வியப்புடன் பார்க்கின்றனர்.
தி.மு.க., இளைஞர்கள் சிலர், 'உதயநிதி பிறந்த நாளுக்கு கூட இவ்வளவு பேனர்கள் வைக்கலையே... அவரை விட, அருண் நேரு பெரிய ஆளாகிட்டாரா...?' என, முணுமுணுத்தபடியே கலைந்து சென்றனர்.