PUBLISHED ON : ஜன 17, 2026 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., கருமாணிக்கம் ராமநாதபுரம், காங்., அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவாக, காங்., நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிப்பது குறித்து, கருமாணிக்கத்திடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், 'இப்போதைக்கு, தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை' என்றார்.
நிருபர் ஒருவர், 'உங்கள் கட்சியில் ஜனநாயகம் இருப்பதால் தான், ஜனநாயகன் திரைப்படத்திற்கு கட்சியினர் ஆதரவு தெரிவிக்கிறாங்களோ...' என கேட்க, எம்.எல்.ஏ., உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

