PUBLISHED ON : ஜன 18, 2026 03:45 AM

வேலுார் மாவட்டம், காட்பாடியில், அரசு சட்டக் கல்லுாரி மற்றும் சேர்க்காடு அரசு கலைக் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, இலவச லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது.
இதில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'மாணவர்களுக்கு லேப்டாப் அவசியம். லேப்டாப் இருந்தால் வெனிசுலா, அரேபியா என பல வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளலாம்; இல்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். இனி, லேப்டாப் தான் உலகம். அதனால் தான், 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டம் மூலம் லேப்டாப் வழங்கப்படுகிறது' என்றார்.
இதை கேட்ட மாணவர் ஒருவர், 'கடந்த ஆட்சியில் பிளஸ் 2 படிக்கிறப்பவே லேப்டாப் குடுத்தாங்க... இவங்க ஆட்சிக்கு வந்து, நாலு வருஷமா குடுக்காம, இப்ப தேர்தலுக்காக தந்துட்டு, வெட்டி நியாயம் வேற பேசுறாங்களே...' என முணுமுணுக்க, சக மாணவர், 'இதுக்காக எல்லாம், நாம இவங்களுக்கு ஓட்டு போட்டுடுவோமா என்ன...' என்றபடியே கிளம்பி னார்.

