தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவரது பார்வையில் படலையோ?'

 'இவரது பார்வையில் படலையோ?'

 'இவரது பார்வையில் படலையோ?'


PUBLISHED ON : ஆக 23, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., கட்சி தொழிற்சங்கமான, ஏ.ஐ.டி.யு.சி.,யின் தேசிய பொதுச்செயலர் அமர்ஜித் கவுர் சமீபத்தில் திருச்சி வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, 12 ஆண்டு கால ஆட்சி, நம் நாட்டிற்கு பேரழிவாக அமைந்துள்ளது. இது, நாட்டை மீண்டும் வறுமைப் பாதைக்கு தள்ளுகிறது; தற்சார்பு பொருளாதாரத்திற்கு எதிரான பாதையில் நாட்டை கொண்டு செல்கிறது.

'அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்து வருகின்றன. இந்தியா ஆபத்தில் உள்ளது; நமக்கு ஒரு மாற்றம் தேவை. செப்., 1ம் தேதி, டில்லியில் மாற்றத்திற்கான பேரணியை நடத்த உள்ளோம்' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கத்தானே, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்திட்டு இருக்கார்... அது, இவரது பார்வையில் படலையோ?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us