PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

சென்னை, எண்ணுார் அனல்மின் நிலைய விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம், எர்ணாவூர் காமராஜர் திருமண மண்டபத்தில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடந்தது.
இதில் கருத்துக்களை தெரிவிக்க, முன்பே பலர் பெயர் கொடுத்திருந்தனர். வரிசைப்படி, இணை சுற்றுச்சூழல் தலைமை பொறியாளர் வாசுதேவன், பொதுமக்களை பேச அழைத்தார்.
கருத்து தெரிவிக்க வந்த வாலிபர் ஒருவரின் பெயரை கூறி பலமுறை அழைத்தும், அவரை காணவில்லை. அவரை மைக் அருகே போக விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியிருந்தனர். அவர் கையை உயர்த்தி கூச்சலிடவே, அனுப்பி வைக்குமாறு போலீசாரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், 'முன்பதிவு செய்து கருத்து சொல்ல வந்தவரையே போக விடாம தடுக்குறாங்களே... போலீசின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

