PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். இவ்விஷயத்தில் அந்த அரசு அடாவடியாக செயல்பட்டால், அது இந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும். மத்திய அரசு இதை அனுமதிக்கக் கூடாது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை.
‘த.வெ.க., அரசு ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளதால், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முன்மொழிந்தால், அதை எதிர்கொள்ள த.வெ.க., அரசு தயாராகவே உள்ளது’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘கூட்டணி கட்சிகளை நம்பி இப்படி சவால் விடுறாரே... கடைசி நேரத்தில் அவங்க காலை வாராம இருந்தா சரி தான்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
