PUBLISHED ON : டிச 07, 2025 03:37 AM

தி.மு.க., சார்பில், தஞ்சாவூரில் ஓட்டுச்சாவடி முகவர்கள், பூத் ஏஜன்ட்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் முதன்மை செயலரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான, கே.என்.நேரு பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய, தி.மு.க., நிர்வாகிகள் பலரும், 'டெல்டா மாவட்டங்களில் உள்ள, 41 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட உள்ள, தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை, அமைச்சர் நேருவே, சோழ மண்டல தளபதியாக இருந்து, வெற்றி பெற வைப்பார்...' என, ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினர்.
செய்தி சேகரிக்க வந்திருந்த சீனியர் நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தையும் இப்படி தான், சோழ மண்டல தளபதின்னு சொன்னாங்க... அவரோ, பன்னீர்செல்வம் அணியில சேர்ந்து, 'அட்ரஸ்' இல்லாம போயிட்டாரு... இவரையும் அப்படி ஆக்கிடாம இருந்தா சரி தான்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

