PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், மதுரையில் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெங்களூரு புகழேந்தி பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க., அழிந்து விடக்கூடாது என, பழனிசாமியுடன் இணைந்து போக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பழனிசாமி இணைந்து செல்ல சம்மதிக்கவில்லை.
'பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட ஏ, பி பார்ம் வைத்து உதயகுமார், செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றனர். அந்த நான்கு பேருக்கும் மானம், ரோஷம் இருந்தால் ராஜினாமா செய்வரா?' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'பன்னீர்செல்வம் முகத்துக்காக ஓட்டு விழுந்து அவங்க ஜெயிச்சிருந்தா கூட, ராஜினாமா கேட்கிறதுல அர்த்தம் இருக்கு... இதெல்லாம் போங்கு ஆட்டம்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

