PUBLISHED ON : ஜூலை 16, 2026 01:24 AM

சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினர்.
இருவருமே, 'மாணவ - மாணவியர் நேர்மையாக இருங்கள். வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள். வரும் நாட்களில், தமிழகம் லஞ்சம் இல்லாத மாநிலமாக மாறும். பொறியியல், மருத்துவம், சட்டம் படிக்க கிராமத்துப் பெண்கள் அதிகளவில் முன்வர வேண்டும்' என பேசினர்.
இதைக் கேட்ட ஒரு மாணவியின் தந்தை, 'பல தனியார் கல்லுாரிகள்ல நன்கொடை என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூல் பண்றாங்களே... அதை ஒழிச்சாலே, இவங்க சொல்ற மாதிரி நிறைய கிராமத்துபெண்கள் உயர்கல்வி படிக்க முடியும்' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
