PUBLISHED ON : பிப் 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், பொது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர் உள்ளிட்ட கட்சியினர், 12:00 மணிக்கே வந்து விட்டனர். மாவட்ட செயலர் சுதர்சனம், 12:45 மணிக்கு தாமதமாக வந்தார். அவர் வந்ததும், கோவில் ராஜகோபுரம் முன் பட்டாசு வெடித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை பார்த்த பார்வையாளர் ஒருவர், 'எல்லாரும் இலையை போட்டுட்டு பசியோடு காத்துட்டு இருக்காங்க... இவங்க பட்டாசு வெடிச்சிட்டு இருக்காங்களே... லேட்டா வந்துட்டு அலப்பறை வேற...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள், ஆமோதித்து நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

