PUBLISHED ON : செப் 14, 2026 12:50 AM

திருச்சி மாவட்ட தி.மு.க., செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம், சமீபத்தில் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் மகேஷ் பேசும்போது, 'தி.மு.க., எனும் ஆல மரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் நடந்த சோதனையின்போது, அங்கு நான் இருந்த ஏழு மணி நேரத்தில், நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். நமக்கு எதிரில் இருப்பவர்கள் பொய்யர்களாகவே உள்ளனர்; அவர்களை எதிர்கொள்ள, நமக்குள் ஒற்றுமை அவசியம்' என்றார்.
நேரு பேசுகையில், 'சட்டசபை தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் ஏழு தொகுதிகளை இழந்து விட்டோம். திருச்சியை மீண்டும் தி.மு.க.,வின் கோட்டையாக மாற்றுவோம்; அதற்கு, அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி பணியாற்ற வேண்டும்' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'முதல்ல இவங்க ரெண்டு பேரும் ஒற்றுமையானாலே போதும்; மற்ற எல்லாரும் ஒற்றுமையாகிடுவாங்க' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
