தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'கலெக்டருக்கு நல்ல மனசு!'

 'கலெக்டருக்கு நல்ல மனசு!'

 'கலெக்டருக்கு நல்ல மனசு!'


PUBLISHED ON : செப் 04, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2026 02:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் ஏரியை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, நடைபாதை, பூங்கா ஆகியவை அமைக்கும் பணிக்கான துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இந்த பணியை, பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா ஹரி தொடங்கி வைத்தார்.

பின் அவர் பேசுகையில், 'மாவட்டம் முழுதும் உள்ள மிக முக்கியமான ஏரிகளை கணக்கெடுத்து, சுத்தப்படுத்தி, துார்வாரும் பணிகளை படிப்படியாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

முன்னதாக நடந்த பூமி பூஜை விழாவில், புரோகிதர் மந்திரங்களை கூறி பூஜைகள் செய்தார். அப்போது, திட்டத்தின் பெயரை கூறி மந்திரங்களை ஓதினார்.

உடனே கலெக்டர் ஷரண்யா ஹரி, 'பெரம்பலுாருக்கு நல்ல மழை பெய்யணும்னும் சேர்த்து வேண்டுங்க' என புரோகிதரிடம் கூற, விழாவில் பங்கேற்ற ஒருவர், 'கலெக்டருக்கு நல்ல மனசுப்பா' என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us