தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இதோட நிறுத்திக்க சொல்றாரே!'

 'இதோட நிறுத்திக்க சொல்றாரே!'

 'இதோட நிறுத்திக்க சொல்றாரே!'


PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் விஜய்.

சமீபத்தில், உசிலம்பட்டி கீழப்புதுாரில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரான உதயகுமார், மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே பேசுகிறார்; முதல்வர் விஜய் பற்றி பேசினால் விளம்பரம் கிடைக்கும் என, தினமும் வீடியோ போடுகிறார்.

'வரும் உள்ளாட்சி தேர்தலில், உதயகுமாரே, 'விசில்' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு விடுவார் போல், இன்னும் அமைச்சர் மனநிலையிலேயே வாழ்கிறார்; 'தற்கொலை படையாக மாறுவேன்' என்றும் சொல்கிறார். நாங்களும் எல்லாரையும் மாதிரி தான் வந்துள்ளோம். எல்லா துயரையும், எங்கள் வயதுக்கு மீறிய கஷ்டத்தையும் தாண்டி தான் வந்திருக்கிறோம். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வுக்கு, இந்த அசிங்கம் தேவையா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us