PUBLISHED ON : ஆக 15, 2026 01:15 AM

இரட்டை அர்த்தத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து, த.வெ.க., சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது; மேற்கு மாவட்டச் செயலர் மதன் தலைமை வகித்தார்.
த.வெ.க., பெண் நிர்வாகி ஒருவர், 'மைக்'கை பிடித்து ஆவேசமாக முழங்கினார். 'கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம்; தமிழக முதல்வரை, மக்களின் முதல்வரை வன்மையாக கண்டிக்கிறோம்' என்று கோஷம் எழுப்ப, அவரைத் தொடர்ந்து, நிர்வாகிகளும் அதேபோன்று கோஷங்கள் எழுப்பினர்.
பின் சுதாரித்த பெண் நிர்வாகி, 'தமிழக முதல்வரை பற்றி அவதுாறு பரப்பிய உதயநிதியை கண்டிக்கிறோம்' என திருத்தி முழங்க, கட்சியினரும் அவ்வாறே கோஷமிட்டனர்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், 'யாரை திட்டணும்னு கூட தெரியாம ஆர்ப்பாட்டத்துக்கு வந்துட்டாங்களே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
