PUBLISHED ON : ஆக 14, 2026 01:13 AM

தமிழக முதல்வர் விஜய் தலைமையில், 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பெயரில், மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சி, மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில், நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதில், தி.மு.க., மண்டலக் குழு தலைவர் ராஜன் பங்கேற்றார். மாநகராட்சி ஊழியர்கள், முதல்வர் விஜய் கூறியதை பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். முதல்வர் விஜய் உறுதிமொழியை வாசித்து முடித்ததும், அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ஆரவாரமாக கை தட்டினர்.
இதைக் கவனித்த தி.மு.க., மண்டலக் குழு தலைவர் ராஜன், 'கைதட்டுற அளவுக்கு முதல்வர் ஆதரவாளர்கள் இங்கேயும் இருக்காங்களா' என முணுமுணுத்தபடியே, அங்கிருந்து கிளம்பினார்.
இதைக் கேட்ட ஊழியர் ஒருவர், 'நாம கைதட்டுறது இவருக்கு கடுப்பை கிளப்பிடுச்சு போல' என கூற, சக ஊழியர்கள் ஆமோதித்தபடியே அங்கிருந்து கலைந்தனர்.
