PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில் நடந்த, 'சிரிப்போம்; சிந்திப்போம்' நிகழ்ச்சியில், 'ப்ரித்வி' பனியன் நிறுவன நிர்வாக இயக்குனர் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாலன் பேசுகையில், 'செய்யும் தொழிலே தெய்வம் என்பது உண்மையானால், நிறுவனங்களும் கோவிலை போல் இருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில், 11 ஆண்டுகளாக, தினமும் காலை அரை மணி நேரம், 2,300 பேர் தியானம் செய்த பிறகே பணிகளை துவங்குகின்றனர். அரை மணி நேரம் வேலை கெடுகிறது என்று பலரும் நினைத்தனர். ஆனால், தொழிலாளர்கள் தெளிவான சிந்தனையுடன் பணியாற்றி, உற்பத்தியை தரமாக பெருக்கி கொடுக்கின்றனர்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'தொழிலாளர் ஆரோக்கியம் தான் நிறுவனத்தின் ஆரோக்கியம்னு யோசித்த இவருக்கு சபாஷ் போடலாம்...' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.