PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

மதுரை மண்டல ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தலைமையில் மதுரையில் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டம் மதியம், 2:00 மணியை தாண்டியும் நடக்கவே, பலரும் உணவருந்த கிளம்பினர். கூட்டம் கலைந்து செல்வதை பார்த்து கோபமடைந்த வைகோ எழுந்து, நிர்வாகிகளை அமருமாறு கண்டித்தார்.
பின் வைகோ பேசும்போது, 'எமர்ஜென்சி காலத்தில் உணவருந்தாமல் நீண்ட நேரம் கூட்டம் நடத்தியுள்ளேன்; கால நேரம் பார்க்காமல் உழைத்திருக்கிறேன்...' என, உணர்ச்சி பொங்க விவரித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த நிர்வாகி ஒருவர், 'நீங்க உழைச்சீங்க... இல்லன்னு சொல்லல... ஆனா, நாங்க சுகர் பேஷன்டுங்க... மணி, 3:00 ஆயிடுச்சு... சாப்பிடலன்னா மயக்கம் வந்துடும்...' என புலம்ப, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.

