தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நம்ம பசங்க முன்னேறினா சரி!'

 'நம்ம பசங்க முன்னேறினா சரி!'

 'நம்ம பசங்க முன்னேறினா சரி!'

1


PUBLISHED ON : செப் 24, 2026 02:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2026 02:12 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம், கோவையில் சமீபத்தில் நடந்தது.

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், 'கடந்த 2006ல் கோவை மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 முடித்த நான், கோவைப்புதுார் பகுதியில் உள்ள ஒரு கல்லுாரியில் சேர ஆசைப்பட்டேன். அப்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன்பே, குறிப்பிட்ட தொகையை செலுத்தி, விரும்பிய பாடப்பிரிவில், 'சீட் புக்' செய்து கொள்ள முடியும்.

'ஆனாலும், 2,000 ரூபாய் கட்ட முடியாததால், வேறு கல்லுாரியில் சேர்ந்து படித்து முடித்தேன். ஆசைப்பட்ட கல்லுாரியில் சேர முடியாத வருத்தம் இன்றும் உள்ளது. என்னை போன்றவர்கள் விட்டு சென்ற கனவுகளை, தற்போது கல்விக் கடன் முகாம்கள் மூலம் மாணவர்கள் நனவாக்கி கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.

இதை கேட்ட மாணவரின் தந்தை ஒருவர், 'அமைச்சருக்கு கிடைக்காத வாய்ப்பு, நம்ம பசங்களுக்கு கிடைச்சிருக்கு... இதை பயன்படுத்தி, அவங்க முன் னேறினா சரி' என கூற, சக பெற்றோர் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us