தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இந்த மழைக்காவது தப்புமா?'

 'இந்த மழைக்காவது தப்புமா?'

 'இந்த மழைக்காவது தப்புமா?'

2


PUBLISHED ON : செப் 25, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2026 02:39 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கான, வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பொறுப்பு அமைச்சராக, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் இந்த மண்டலங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மணலி - ஆமுல்லைவாயல், புழல் உபரி கால்வாய் பகுதியில் படர்ந்திருந்த ஆகாய தாமரை செடிகளை, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றும் பணியை பார்வையிட்டார்.

இதை பார்த்த ஒருவர், 'இந்த ஒரு பொக்லைனை வைத்து பருவமழையை எப்படி சமாளிக்க போறாங்க?' என வினவினார். அருகில் இருந்தவர், 'இது, அமைச்சர் ஆய்வுக்காக அவசரமா வந்திருக்கும். மழை பெய்யத் துவங்கியதும், மின்னல் வேகத்தில் அதிகாரிகள் வேலை செய்ய ஆரம்பிச்சிருவாங்க' என, கிண்டலடித்தார்.

அதற்கு முதல் நபர், 'இந்த முறையாவது பெருவெள்ளத்தில் இருந்து மணலி தப்புமான்னு பார்ப்போம்' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us