PUBLISHED ON : செப் 26, 2026 01:28 AM

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகனும், வேலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த், சமீபத்தில் காட்பாடியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தவில்லை. 'அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க விரும்புகிறேன்' என முதல்வர் விஜய் பேசியதை பார்த்தோம். ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக போராடும் விவசாயிகளை அழைத்து பேச துப்பில்லாத அரசாக த.வெ.க., உள்ளது' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழில் வளாகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை, குண்டர் சட்டத்தில் கைது பண்ணி சிறையில அடைச்சது இவங்க தானே...
'இப்ப என்னடான்னா, இவங்களோட ஆட்சியில விவசாயிகள் போராட்டமே நடத்தாத மாதிரி பேசுறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
