PUBLISHED ON : செப் 27, 2026 01:30 AM

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, சமீபத்தில் மானாமதுரையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'இந்தியாவில் பிரதமராக வேண்டும் என்றால், 272 எம்.பி.,க்களுக்கு தலைவராக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுமே, தங்களது தலைவர்களை வானளாவ புகழ்வது வழக்கம் தான். குறிப்பாக, தமிழகத்தில் இந்த வழக்கம் அதிகம். முதல்வர் விஜய் திரையுலகில் இருந்து வந்துள்ளார். அதனால், 'விஜய் தான் பிரதமர் வேட்பாளர்' என, அவரது ரசிகர்கள் கூறுவது இயல்பு தான்.
'சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். ஹைதராபாத், பெங்களூரை விட, நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். இந்தியாவிலேயே மிகவும் மோசமான விமான நிலையமாக சென்னை உள்ளது' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அதான் பரந்துார்ல சர்வதேச விமான நிலையம் கட்ட இருந்த திட்டத்தையும், த.வெ.க., அரசு ஊத்தி மூடிடுச்சே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
