PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள், கோவை, சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தன. அப்போது, திடீரென கல்லுாரிபகுதியில் மட்டும் மழை பெய்தது; மற்ற சுற்றுவட்டார பகுதியில் வெயில் அடித்தது. இதனால், அன்று நடக்க இருந்த இறுதிப் போட்டிகள் அனைத்தும் அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
அப்போது, அங்கிருந்த வீரர்கள் சிலர், 'சுற்று வட்டாரப் பகுதியில் வெயில் வாட்டி எடுக்குது. இந்த கிரவுண்டுல மட்டும் மழை பெய்யுதே... ரொம்ப ஆச்சரியமாக இருக்கு...' என்றனர்.
அருகே இருந்த நடுவர் ஒருவர், 'இதுவும் வருண பகவானின் விளையாட்டு தான் பா...' எனக் கூற, வீரர்கள் ஆனந்த மழையில் நனைந்தபடியே சிரித்தனர்.

