PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும், தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்கியது சரியில்லை. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அம்மொழி இருப்பது யாருக்கும் தெரியாது; இலக்கணம், இலக்கியம் இல்லை. அழிந்து வரும் மொழிக்கு எதற்கு நிதி ஒதுக்குகின்றனர் என்று அவர்களை தான் கேட்க வேண்டும்.
'மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., குறித்த வீடியோ வெளியிட்டது தவறு. ஈ.வெ.ரா., குறித்த விமர்சனத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு சரியான பாடத்தை வருங்காலத்தில் மக்கள் கற்பிப்பர். முருகனை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.,வினர் நினைக்கின்றனர். ஆனால், முருகன் எங்களுடன் இருக்கிறார்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'மத்திய அமைச்சர் முருகனே, பா.ஜ.,வில் தானே இருக்கிறார்...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.