PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன், 17 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, காணொளி காட்சி வாயிலாக இதை திறந்து வைத்தார். நாமக்கல் ஸ்டேஷனில் நடந்த விழாவில், பா.ஜ., தமிழக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில், பா.ஜ.,வில் இருந்து விலகி, அண்ணாமலையின், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்த ராசிபுரத்தைச் சேர்ந்த லோகேந்திரன், அங்கிருந்து விலகி மீண்டும் பா.ஜ.,வில் இணைந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்றார்; வி.ஐ.பி., வரிசையில் அமர்ந்து, ரயில்வே அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்தார்.
இதை பார்த்த ராமலிங்கம், ‘பொறுப்பு வேண்டாம்னு எழுதி கொடுத்துட்டு, வேறு கட்சிக்கு போயிட்டு மீண்டும் இங்க வந்திருக்கே... எழுந்து வெளியே போ...’ என திட்ட, பதிலுக்கு லோகேந்திரன் பேச, அங்கு சலசலப்பு எழுந்தது.
இதை பார்த்த ஒருவர், ‘பிரதமர் விழாவிலும் இவங்க உட்கட்சி பஞ்சாயத்தை விட மாட்டாங்களா...?’ என முணுமுணுத்தபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.
