PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில் ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது, படிக்கட்டுகளில் அமர்ந்து தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இம்முறை உற்சவத்திற்கு சில நாட்களுக்கு முன், எதிர்பாராத விதமாக வாலிபர் ஒருவர் குடிபோதையில் குளத்தில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டார். இதை காரணம் காட்டி, போலீசார் பக்தர்களை படிக்கட்டில் அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.
மாறாக, குளத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதால்,பக்தர்கள் குளத்தின் சுற்றுக் கம்பி வழியாக பரிதாபமாக நின்றபடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர் ஒருவர், 'இந்த ஆட்சியில் அறநிலையத் துறை எப்ப, எதுக்கு தடை போடலாம்னு ரெடியா காத்துட்டு இருக்கே... இதுல, 'குடி'மகன் விழுந்தது, இவங்களுக்கு ஒரு சாக்கா போயிடுச்சு...' என, புலம்பியவாறு நடந்தார்.