தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'டாஸ்மாக் விற்பனை படுத்துடுமே!'

 'டாஸ்மாக் விற்பனை படுத்துடுமே!'

 'டாஸ்மாக் விற்பனை படுத்துடுமே!'


PUBLISHED ON : ஏப் 25, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், துாத்துக்குடியில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், 'ஆலங்குளத்தில் எஸ்.ஐ., இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில், பனை தொழிலாளி ஒருவர் கால் ஊனமாகி, வாழ்வாதாரத்தை இழந்துள்ளார். அவருக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகம் முழுதும், 6 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில், தற்போது 3 கோடி பனை மரங்கள் தான் உள்ளன.

'அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, ஆந்திராவில் கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டு, பனை தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல, தமிழகத்திலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். கள் குடித்து இதுவரை யாரும் மரணம் அடைந்தது கிடையாது' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'கள்ளுக்கு அனுமதி அளித்தால், 'டாஸ்மாக்' விற்பனை படுத்துடுமே... அதனால, கண்டிப்பா அனுமதி தர மாட்டாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us