/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'சீரியல் தான் முக்கியமா இருக்கு!'
/
'சீரியல் தான் முக்கியமா இருக்கு!'
PUBLISHED ON : மார் 16, 2024 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், தாராட்சி கிராமத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள், தற்போதைய தி.மு.க., அரசு நிறைவேற்றி வரும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். இதை கவனிக்காமல், கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த கோவிந்தராஜன், 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தெரிகிறது. டிவியில் சீரியல் பார்க்கும் நேரத்தில் இங்கு வந்து விட்டோமே என நினைப்பது உங்கள் முகத்தில் தெரிகிறது. நான் உடனே முடித்து விடுகிறேன்' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'நாம தர்ற பரிசு பொருட்களை விட, டிவி சீரியல்கள் தான் பெண்களுக்கு ரொம்ப முக்கியமா இருக்கு...' என, முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

