PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஐந்தாவது வார்டு கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இதில், பங்கேற்ற மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாகி, வலுவாகி விட்டதால், ஆட்சி மாற்றம் வரும்; நமக்கு வந்து கொண்டிருக்கும் மாதாந்திர கமிஷன் தொகை வராது' என, தி.மு.க., கூட்டணி கட்சிகள் பதற்றமாகி விட்டன.
'ஊழல் திமிங்கிலங்களுடன் நீந்தும் தி.மு.க., கூட்டணிகட்சியினர், அ.தி.மு.க., கூட்டணி குறித்து பேசகூடாது. நாங்கள் மட்டுமல்ல; தி.மு.க.,வும் ஒரு காலத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருந்ததை மறந்து விடக்கூடாது' என்றார்.
இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'கூட்டணி கட்சிகளுக்கு மாசா மாசம் கமிஷன் கொடுத்து பழக்கிட்டாங்க. நாளைக்கு நாம ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு கமிஷன் கொடுக்கணும் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிர்வாகிகள் சிரித்தபடியே கலைந்தனர்.