PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

'இப்படி தலையாட்டுறாரே!'
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில், அத்தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன்
ஆய்வு செய்தார். அப்போது, சிகிச்சை, புறநோயாளிகள்சீட்டு வழங்குதல், ரத்தப் பரிசோதனை, உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என, பல்வேறு
விஷயங்களிலும் காலதாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் புகார் வாசித்தனர்.அங்கிருந்த தலைமை மருத்துவரிடம், 'மக்கள்
நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்தேன்' எனக் கூறிய எம்.எல்.ஏ.,'நோயாளிகள் கூறிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். தலைமை மருத்துவரும், எம்.எல்.ஏ., கூறிய
அனைத்துக்கும் தலையாட்டி, அவரை திருப்திபடுத்தினார்.இதை பார்த்த மருத்துவர் ஒருவர், 'ஆய்வுக்கு வந்த எம்.எல்.ஏ.,விடம், இங்குள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை எடுத்து சொல்லி, அதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் தெரிவிக்கும்படி சொல்லாமல், தலைமை மருத்துவர் இப்படி தலையாட்டுறாரே...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.