PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடந்த தமிழக காங்., செயற்குழு கூட்டத்தில், மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூரஜ் ஹெக்டே உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைவர்களை வரவேற்று, தமிழக காங்., பொதுச்செயலரான முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு, மாநில நிர்வாகி அப்துல் சமது ஆகியோர் பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வித்திட வருகை தரும் சூரஜ் ஹெக்டே அவர்களே வருக வருக' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
கூட்டத்தில், கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, 'கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்த வேண்டும்' என்றதும், பலத்த கரகோஷம் எழுந்தது. அப்போது, ஆளுங்கட்சிக்கு வேண்டிய மூத்த தலைவர்கள் சிலர், 'கூட்டணி ஆட்சி பற்றி இப்போது பேச வேண்டாம்; பொறுமையாக இருப்போம்' என, பூசி மொழுகினர்.
காங்., தொண்டர் ஒருவர், 'ஆளுங்கட்சியின் ஆக சிறந்த அடிமைகள் இருக்கும் வரை ஒண்ணும் நடக்காது...' என, புலம்பியவாறு நடையை கட்டினார்.

