PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன், சமீபத்தில் புதுச்சேரி வந்தார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‘தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், கள நிலவரம் தி.மு.க.,விற்கு சாதகமாக உள்ளது; அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும். கடந்த லோக்சபா தேர்தலில், ‘ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்’ என, முதன் முறையாக கூறியவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். ஆனால், காங்கிரசார் எங்களுக்கே துரோகம் செய்து விட்டனர்.
‘புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ‘த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தான் இருக்கிறார்’ என, இடதுசாரிகள் குற்றஞ்சாட்டுவது சரி தான். புதுச்சேரி காங்கிரசுக்கு சரியான தலைமை இல்லாததால், புதுச்சேரியில் தங்கள் கட்சியின் தலைவராக விஜயை போட்டுள்ளனர்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தங்களது கூட்டணியை விட்டு விலகிய காங்கிரசை நல்லா மட்டம் தட்டுறாரே’ என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
