PUBLISHED ON : அக் 04, 2026 12:00 AM

இந்திய கம்யூ., கட்சியின் திருப்பூர் எம்.பி.,யான சுப்பராயன், சமீபத்தில் தாராபுரத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'அரசியல் நெறியுடன் செயல்படும் இடதுசாரிகள், பா.ஜ., சதியை முறியடித்து, கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக மட்டுமே, த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். தாராபுரம் இடைத்தேர்தல் இயல்பாக நடைபெற வேண்டியது அல்ல; திணிக்கப்பட்ட தேர்தலாக அமைந்துள்ளது. 'ஊழலை ஒழிப்போம்' என கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க., தன் தேவைக்காக இடைத்தேர்தலை கொண்டு வந்துள்ளது.
'மன தைரியம், கொள்கை பலத்துடன் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளோம். பணம், ஜாதி உள்ளிட்ட பலத்தை பயன்படுத்தி, தேர்தலில் எங்களை தோற்கடிக்கலாம். ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதில் நாங்கள் தோற்றதில்லை' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தல்ல தோல்வி உறுதி என்பதை இப்பவே கணிச்சிட்டாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.
