/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'அவர் கத்துக்கிட்டது அவ்வளவுதான்!'
/
'அவர் கத்துக்கிட்டது அவ்வளவுதான்!'
PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

சென்னை, மாநகராட்சியின் மணலி மண்டலத்தில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மணலி பாடசாலை தெருவில் உள்ள துவக்கப் பள்ளியில், மாணவர்களுடன் கலந்துரையாடிய மேயர், சீருடை அணியாதது குறித்து, ஆசிரியையரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, ஆசிரியையர் தெளிவில்லாத பதில் கூறியதால், கடுப்பான கமிஷனர் குமரகுருபரன், 'மரமண்ட' என கடிந்து கொண்டார். இதைப் பார்த்து உடன் சென்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இளம் நிருபர் ஒருவர், 'வழக்கமா மாணவர்களை தான் டீச்சர்கள் மரமண்டன்னு திட்டுவாங்க... அதுவே தப்பு... கல்வி கற்றுத் தரும் ஆசிரியையரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி இப்படித் திட்டலாமா...' என, முணுமுணுக்க, சீனியர் நிருபர், 'அவர் கத்துக்கிட்டது அவ்வளவு தான்பா...' என்றபடியே நடந்தார்.

