PUBLISHED ON : ஜன 10, 2024 12:00 AM

திருச்சி விமான நிலைய, 2வது முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், தமிழக வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின், தன் பேச்சில், பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.
மோடியின் கவனத்திற்கு விஷயம் செல்ல வேண்டும் என்பதற்காக, அந்த கோரிக்கையை ஆங்கிலத்திலும் குறிப்பிட்டார். அப்போது, பா.ஜ.,வினர், 'பாரத மாதாவுக்கு ஜே... மோடி வாழ்க... ஜெய் ஸ்ரீராம்...' என்ற கோஷங்களை எழுப்பினர். ஆனாலும், முதல்வர் ஸ்டாலின், தன் பேச்சை நிறுத்தவில்லை.
மூத்த நிருபர் ஒருவர், 'இதே மாதிரி தான் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டதுக்கு, 'என்னை பேச விடாமல் பா.ஜ.,வினர் இடையூறு செய்தனர்' என்று சொல்லி, பிரதமர் பங்கேற்ற விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசாமல் புறக்கணித்தார்... நம்ம முதல்வர் அப்படி இல்லை...' என, முணுமுணுக்க,சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

