PUBLISHED ON : ஜன 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்லில், 2016ல் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இரவு, 10:00 மணிக்கு மேல் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தன் ஆதரவாளர்களுடன் வந்தார்.
அப்போது பேட்டியளித்த அவரிடம், நிருபர் ஒருவர், 'நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து உங்கள் கருத்து என்ன?' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு எந்த பதிலும் அளிக்காத வைகோ, சம்பந்தமில்லாமல் பிரதமர் மோடியை கடுமையாக சாடி பேசினார்.
இதை கவனித்த மூத்த நிருபர் ஒருவர், 'ஒரு வருஷத்துல சட்டசபை தேர்தல் வருது... எப்படியும் இவங்க, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை... ஆனா, விஜயுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கே... அதான் விஜயை தவிர்த்து மோடியை விளாசுறாரு...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தவாறு நடந்தார்.

