/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க!'
/
'ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க!'
PUBLISHED ON : ஜன 06, 2026 01:40 AM

தர்மபுரி, மதிகோன்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கத்துக்கான சிறப்பு முகாம் சமீபத்தில் நடந்தது. வாக்காளர் பட்டியல் திருத்த மேற்பார்வையாளரான அரசு செயலர் ஷில்பா, தர்மபுரி கலெக்டர் சதீஸ்ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிறப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சில தினங்களுக்கு முன், வாகனம் மூலம் அறிவிப்பு வெளியிட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், கலெக்டர் வந்த பின், விழிப்புணர்வு பேனர்களை ஒட்டும் பணியை நகராட்சி அதிகாரிகள் துவங்கினர்.
இதனால், ஆத்திரமடைந்த கலெக்டர் சதீஸ், 'இப்படி ஒரு முகாம் நடப்பதே வாக்காளர்களுக்கு தெரியாத நிலையில் உள்ளது. ஏன் இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறீர்கள்?' என கடிந்து கொண்டார்.
இதை கேட்ட வாக்காளர் ஒருவர், 'அதிகாரிகள் என்ன தான் திட்டினாலும், ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

