தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘அரசை அசைக்கவே முடியாது!’

‘அரசை அசைக்கவே முடியாது!’

‘அரசை அசைக்கவே முடியாது!’


PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வங்கக் கடலில் சமீபத்தில் உருவாகி, ஆந்திராவில் கரையை கடந்த, ‘முரசு’ புயலில் சிக்கி, சென்னை, காசிமேடு மீனவர்கள் ஒன்பது பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்தினரை சமீபத்தில் சந்தித்து பேசிய தி.மு.க., இளைஞரணி செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி, நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

பின் பேட்டி அளித்த உதயநிதி, ‘சென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட பின்பும், விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு எப்படி அனுமதிக்கப்பட்டன? மீனவர்கள், ‘இன்சூரன்ஸ்’ கூட எடுக்க முடியாத சூழல் உள்ளது. இனியாவது, ‘சோப்ளாங்கி’ த.வெ.க., அரசு சரியாக செயல்பட வேண்டும்’ என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், ‘சோபா மாடல்’ அரசுன்னு திட்டிட்டு இருந்தார்... இப்ப, சோப்ளாங்கி அரசுன்னு மாத்திட்டாரே...’ என முணுமுணுத்தார்.

சக நிருபரோ, ‘மீனவர்களின் ‘இன்சூரன்ஸ்’ பத்தி இவங்க ஆட்சியில, கோட்டை விட்டுட்டு இப்ப தான் கவலைப்பட தெரிஞ்சுதோ... யார் சோப்ளாங்கின்னு இவருக்கே புரியும்... த.வெ.க., அரசை இப்போதைக்கு அசைக்க முடியாது’ என்றபடியே அங்கிருந்து கிளம்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us