தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘செயலர் நொந்து போயிருப்பாரு!’

‘செயலர் நொந்து போயிருப்பாரு!’

‘செயலர் நொந்து போயிருப்பாரு!’


PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கம் ஊராட்சியில், அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பங்கேற்றார்.

இதே கிராமத்தில், ஆக., 15ல் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் கவிதா பங்கேற்றார். அப்போது, ‘கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் மற்றும் வரவு -– செலவு கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை’ என மக்கள் தெரிவித்தனர்.

இதனால் தான், அக்., 2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதன்மை செயலர் பங்கேற்க, களாம்பாக்கம் கிராமமே சிறந்தது என கலெக்டர் தேர்வு செய்திருக்கும் தகவல் கிடைத்தது.

இதை கேள்விப்பட்ட நிருபர் ஒருவர், ‘கலெக்டர் மேடம் விபரமா, பிரச்னை இல்லாத கிராமமாக பார்த்து தான் தேர்ந்தெடுத்து இருக்காங்க... பக்கத்துல இருக்க பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு போயிருந்தா, செயலர் நொந்து போயிருப்பாரு’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us