PUBLISHED ON : டிச 03, 2025 12:30 AM

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மாநகராட்சி உதவி கமிஷனர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழரசன் பேசுகையில், 'கடந்த 20 கூட்டங்களாக, என் வார்டில் விடுபட்ட நான்கு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை கேட்கிறேன்; நடக்குமா, நடக்காதா... என் வார்டில் சேதமான மின் பெட்டிகளுக்கு பதிலாக புதிய மின் பெட்டிகள் வருமா, வராதா?' என, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'அடப்பாவமே... ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே இந்த நிலைமையா...?' என, முணுமுணுத்தார்.
சக நிருபரோ, 'எந்த வார்டா இருந்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காம அலட்சியமா தான் இருக்காங்கன்னு இதுல இருந்தே தெரியுதுப்பா...' என்றபடியே, அரங்கை விட்டு வெளியேறினார்.

