/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லை!'
/
'எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லை!'
PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காவேரிராஜபுரத்தில், 12.13 கோடி ரூபாயில், 'சிட்கோ' வாயிலாக தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
காவேரிராஜபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திருவள்ளூர் சிட்கோ கிளை மேலாளர் நந்தகுமார், எம்.எல்.ஏ.,வுக்கு இளநீரை அவரே கொண்டு வந்து கொடுத்தார்.
இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'அதிகாரியே இளநீர் கொடுத்து, எம்.எல்.ஏ.,வுக்கு ஐஸ் வைக்கிறாரோ...' என, முணுமுணுத்தார். மூத்த நிருபரோ, 'அதெல்லாம் இல்லப்பா... இந்த ஒன்றியத்துல நிலவுற கோஷ்டிப்பூசலால கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சிக்கு வரல... எம்.எல்.ஏ.,வை உபசரிக்க ஆளில்லாம, அதிகாரியே உபசரிக்கிறாரு...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.