PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம், மதுரையில் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசுகையில், 'அ.தி.மு.க.,வில் மூன்றாம் தலைமுறை வந்துள்ளது. பல கட்சிகளில் வயதானவர்கள் தான் இருப்பர். அ.தி.மு.க.,வுக்கு மட்டும் தான், புத்துணர்வு அளிக்கும் வகையில் இளைஞர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால், தி.மு.க.,வைச் சேர்ந்த, துணை முதல்வர் உதயநிதி, தன்னைத் தானே தலைவர் என்று சொல்லிக் கொள்கிறார். அவரை யாரும் தலைவராக ஏற்கவில்லை.
'கடந்த சட்டசபை தேர்தலில், ஒரு செங்கலை காண்பித்து, 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கே என்றார்; நீட் தேர்வு ரத்து, ரகசியம் என்று சொன்னார். இப்போது மீண்டும் வந்து செங்கலை துாக்கி உதயநிதி காட்டுவாரா... அப்படி காட்டினால், மக்களும் செங்கலை துாக்க ஆரம்பித்து விடுவர்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'வரவிருக்கும் சட்டசபை தேர்தலின் போது, செங்கலுக்கு கிராக்கி ஆகிடும் போலிருக் கே...' எனக் கூற, சக தொண்டர்கள் சிரித்து நகர்ந்தனர்.

