PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM

அரியலுார் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'ஜெயலலிதா, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார். பின், 'தெரியாமல் கூட்டணி வைத்து விட்டேன்; இனி என் வாழ்க்கையில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்' என, அறிவித்தார்.
'அதே போல தான், கட்சியின் இப்போதைய பொதுச்செயலர் பழனிசாமியும் தெரியாமல், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விட்டார். நான்கரை ஆண்டு ஆட்சியை காப்பாற்ற, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து தான் ஆக வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது; தற்போது மாறிவிட்டது. பா.ஜ.,வுடன் எந்த காலத்திலும் இனிமேல் கூட்டணி கிடையாது' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இவங்க வசதிக்கு ஏத்த மாதிரி மாறிக்குவாங்க... இதையெல்லாம் கேட்குற நம்மை முட்டாள் ஆக்குறாங்க...' என, விரக்தியை வெளிப்படுத்தியவாறு நடந்தார்.