PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், தி.மு.க., வர்த்தக அணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் திருச்சி சிவா, அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்று பேசினர். நாசர் பேசும்போது, மேடையின் முன்பகுதியில் இருந்து உடன்பிறப்புகள் சிலர் சத்தமாக பேசியபடி இருந்தனர்.
மேடையில் இருந்தவர்கள், அவர்களை, 'அமைதியாக இருங்கள், அமைதியாக இருங்கள்' என, தொடர்ந்து கூறியும் காதில் வாங்காமல் பேசிக் கொண்டிருந்தனர்.
கடுப்பான அமைச்சர் நாசர், 'நாலஞ்சு கொசுக்கள் முன்னாடி உட்கார்ந்து கடித்துக் கொண்டே இருக்கின்றன' என, நகைச்சுவையாக கூறினார்.
இதை கேட்ட பொதுஜனம் ஒருவர், 'நாசரே, ஏடாகூடமா பேசி பதவி பறிபோய் இப்பதான் திரும்ப வந்திருக்காரு... திரும்பவும் அவரை கடுப்பேத்துறாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.