PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கான, தி.மு.க., மண்டல பொறுப்பாளராக, அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்ட பின், மதுரையில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தொகுதி வாரியாக குறைகளை தெரிவிக்க நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒரு சட்டசபை தொகுதிக்கு, பகுதி, ஒன்றியம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என குறைந்தது, 10 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால், மாவட்டச் செயலர்கள் உடன் இருந்ததால், பலரும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாமல், மாவட்டச் செயலர்களை மகிழ்விக்கும் வகையில் பதில் கூறிவிட்டு வெளியேறினர்.
வெளியில் வந்த நிர்வாகி ஒருவர், 'மாவட்டம் முன்னாடியே, அவரை பற்றி எப்படி குறை கூற முடியும்... இதெல்லாம் கண்துடைப்பு கூட்டம்...' என, புலம்பியபடியே தன் காரை நோக்கி நடந்தார்.