PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் பரிசு வழங்காத தமிழக அரசை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில் திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முதலில் போலீசார் அனுமதி மறுத்தனர்.
சிறிது நேரத்துக்குப் பின், 'அனுமதி வந்தாச்சு... ஆர்ப்பாட்டத்தை சீக்கிரமா முடிச்சிட்டு போங்க...' என்றனர்.
பலமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த பெண்கள், 'ஏன் சார்... முன்கூட்டியே அனுமதி கொடுத்திருந்தால், இன்னும் நிறைய பேரை அழைச்சிட்டு வந்திருப்போமே...' என கேட்க, அந்த போலீஸ், 'அட சும்மா இருங்கம்மா... நீங்க போடுற சத்தமே காதை கிழிக்குது... இதுல இன்னும் கொஞ்சம் பேருன்னா தாங்காது...' என, முணுமுணுத்தவாறு நகர்ந்தார்.