சத்ய சாய்பாபா நுாற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி
சத்ய சாய்பாபா நுாற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி
PUBLISHED ON : நவ 19, 2025 09:47 PM

ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல் பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.





சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்தது. சத்ய சாய்பாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளது. ஏழை மக்களுக்கான நமது சமூக பாதுகாப்பு திட்டங்கள் சர்வதேச அரங்குகளில் போற்றப்படுகின்றன. உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.
சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று கூடியிருக்கும் பலர் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளால் தங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளனர். பாபாவின் உத்வேகத்துடன், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மற்றும் அதன் துணை அமைப்புகள் புனிதமான பணியை தொடர்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சத்ய சாய் பாபாவை கவுரவிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட்டது நமது அரசிற்கு ஒரு மரியாதை. இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாபா சேவகர்கள் சேவை பாராட்டுதலுக்கு உரியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-எல்.முருகராஜ்.

